/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டரிடம் முறையிடுவேன்:திருப்பூர் எம்.பி. திட்டவட்டம்
/
கலெக்டரிடம் முறையிடுவேன்:திருப்பூர் எம்.பி. திட்டவட்டம்
கலெக்டரிடம் முறையிடுவேன்:திருப்பூர் எம்.பி. திட்டவட்டம்
கலெக்டரிடம் முறையிடுவேன்:திருப்பூர் எம்.பி. திட்டவட்டம்
ADDED : நவ 20, 2025 03:08 AM
'கலெக்டரிடம் முறையிடுவேன்': எம்.பி. சுப்பராயன் திட்டவட்டம்: ''நாசக்கேடாக மாறியுள்ள நல்லாறு விவகாரம் குறித்து, கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்'' என, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.
நல்லாறு பாதுகாப்பு குழு என்ற அமைப்பைஏற்படுத்தியுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர், நல்லாறு மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, திருப்பூர் எம்.பி., கவனத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று காலை, 8:00 மணிக்கு பூண்டியில் உள்ள, நல்லாற்று கரையில் கட்டப்பட்டு வரும்,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்ட பின், 'நாசக்கேடாக மாறியுள்ள நல்லாறு குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்,' என்றார்.
அதன் தொடர்ச்சியாக, நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, அன்னுாரில் நல்லாறு துவங்கி, அவிநாசியை கடந்து வரும் நிலையில், நீலகிரி எம்.பி. ராஜாவை நேரில் சந்தித்தும், நல்லாறு பாதுகாப்பு குழுவினர் நேற்று கோரிக்கை மனு வழங்கினர்.

