/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளி மாநில தொழிலாளர் கணக்கெடுப்பு துவங்குகிறது
/
வெளி மாநில தொழிலாளர் கணக்கெடுப்பு துவங்குகிறது
ADDED : நவ 20, 2025 03:08 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர் கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தொழிலாளர் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். தலைமை வகித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமானம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் https://tnuwwb.tn.gov.in என்கிற இணையதளத்தில், பதிவு செய்து, அடையாள அட்டை பெற்று கொள்ள வேண்டும். வெளிமாநில தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு பணிக்கு, அரசு துறை மற்றும் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

