ADDED : ஏப் 18, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சென்னையில் உள்ள சேவாபாரதியின் பாரதி பயிலகம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும், 2025 - 26ம் ஆண்டு போட்டித்தேர்வுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, சேவாபாரதி சார்பில் தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் - தாராபுரம் ரோட்டிலுள்ள விவேகானந்த வித்யாலயா பள்ளியில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 13 பேர் தேர்வு எழுதினர். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, சென்னையில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அகாடமியில் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு, www.bharathipayilagam.com என்கிற இணையதளத்தை பார்வையிடலாம்.