/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்
ADDED : டிச 08, 2024 02:46 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கடந்த நவம்பர் மாதம் முழுவதும் முகாம் நடைபெறாததால், நேற்று முன்தினம் முகாமில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
கண், காது - மூக்கு - தொண்டை, எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 43 பேருக்கு புதிய அடையாள அட்டையும்; 14 பேரின் அடையாள அட்டையும் புதுப்பித்து கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.