ADDED : ஏப் 28, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.,) 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
குமரன் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மாநில இணை பொது செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் பாரி கணபதி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்து பேசினார்.

