/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை
/
போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை
ADDED : டிச 05, 2025 08:31 AM
திருப்பூர் : கடந்த நவ. மாதம் மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குண்டடம், முத்தையன் பட்டியில், போலி டாக்டர், அவரது மனைவி இருவரும் சிக்கினார். மருந்துக்கடை நடத்த அங்கீகாரம் வாங்கி விட்டு, வீட்டுக்குள்ளே மருத்துவமனை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வெள்ளகோவில், தசவநாயக்கன் பட்டியில், 75 வயது முதியவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தார். போலி டாக்டரான இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு மாதத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இரண்டு போலி டாக்டர்கள் மாவட்டத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறியும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ நிறுவனங்கள் www.tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகம் இருப்பின் போலி டாக்டர்கள் குறித்து, tncea.dmrhs@gmail.com என்ற இமெயில் முகவரி அல்லது 104 என்று அரசின் இலவச தொடர்பு எண் மூலமாக பொதுமக்கள், நோயாளிகள் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

