/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு சந்திப்பில் மேம்பாட்டு பணி
/
ரோடு சந்திப்பில் மேம்பாட்டு பணி
ADDED : பிப் 16, 2025 10:53 PM

உடுமலை,; உடுமலை அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், கோழிக்குட்டை சந்திப்பு பகுதியில், விரிவாக்க பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பாளையம் அருகே, அடிவள்ளி மற்றும் கோழிக்குட்டை கிராம இணைப்பு ரோடுகள் இணையும் சந்திப்பு பகுதி அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், சந்திப்பு பகுதியில், நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நெரிசலை தவிர்க்க, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சந்திப்பு மேம்பாட்டு பணிகளுக்கு, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. கிராம இணைப்பு ரோடுகளையும் விரிவுபடுத்தி, சென்டர்மீடியன் அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

