ADDED : பிப் 21, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், தொல்லியல் மரபு மன்றத் துவக்க விழா நடந்தது. துறைத்தலைவர் சங்கமேஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
'தொல்லியல் நினைவுச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பாதுகாத்தல்,' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் 'அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகளும் வரலாற்று மீள் உருவாக்கமும்,' என்ற தலைப்பில் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் சத்யா, சக்திசெல்வம் ஆகியோர் பேசினர். பேராசிரியர் குருசந்திரபத்மன் நன்றி கூறினார்.

