/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுந்தீவன வளர்ச்சி அதிகரிப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
/
பசுந்தீவன வளர்ச்சி அதிகரிப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
பசுந்தீவன வளர்ச்சி அதிகரிப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
பசுந்தீவன வளர்ச்சி அதிகரிப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
ADDED : அக் 17, 2024 10:19 PM
உடுமலை : உடுமலை பகுதியில் சில தினங்களாக மழை பெய்து வருவதால், பசுமை பரப்பு அதிகரித்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றனர். தீவன விலை உயர்வு, தீவன தட்டுப்பாடு என்பது, கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால், வறட்சி நிலவியது. கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியது. வறட்சியால், பசுமை பரப்பளவு குறைந்து, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சுணக்கம் ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், பசுமை பரப்பளவு அதிகரித்து வருகிறது. பசுந்தீவனங்கள் அதிகரித்துள்ளதால், விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.