/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காப்பு கலை பயிற்சி நாட்களை கூடுதலாக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்
/
தற்காப்பு கலை பயிற்சி நாட்களை கூடுதலாக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்
தற்காப்பு கலை பயிற்சி நாட்களை கூடுதலாக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்
தற்காப்பு கலை பயிற்சி நாட்களை கூடுதலாக்குங்க! பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : நவ 18, 2024 10:24 PM
உடுமலை ; அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு, கராத்தே பயிற்சி வழங்கும் நாட்களை கூடுதலாக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி குழந்தைகள், பல சூழ்நிலைகளில் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்னைகளிலிருந்து, பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முதலில், ஒரு வட்டாரத்துக்கு ஒரு பள்ளியில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தால், மாணவியர் பயன்பெறுவதை பெற்றோர் வரவேற்றனர்.
இதனால், திட்டத்தை அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும், செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதன்படி அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும், பெண் குழந்தைகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிகள் தற்போது, எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது. ஒரு கல்வியாண்டில், மூன்று மாதங்களுக்கு என இந்த வகுப்பு, வாரத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
பள்ளி குழந்தைகள் ஆர்வத்தோடு இதில் பங்கேற்கின்றனர். சில பள்ளிகளில், மாணவர்களின் ஆர்வத்தால், பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக நாட்களை அதிகரித்தும், வழங்குகின்றனர்.
மூன்று மாதங்களில், பயிற்சிக்கான அடிப்படைகளை மட்டுமே கற்றுத்தர முடிகிறது. விருப்பமுள்ள குழந்தைகள், அந்த பயிற்சி ஆசிரியர்களிடம் தொகை செலுத்தி தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கின்றனர்.
சில குழந்தைகளுக்கு விருப்பமிருந்தும், பயிற்சிக்கு செல்ல போதிய பொருளாதார வசதியின்மையால், விட்டுவிடுகின்றனர். மாணவர்கள் அனைவரும் கராத்தே தற்காப்பு பயிற்சியில் முழுமையாக பயன்பெற, பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி நாட்களை கூடுதலாக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
இன்றைய சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கயானதாக உள்ளது. பெண் குழந்தைகள் தனியாக வெளி இடங்களுக்கு அனுப்புவதற்கு பெற்றோர் அச்சத்துடன்தான் இருக்க வேண்டியுள்ளது.
அவர்கள் அனைத்து சூழலையும் சமாளிப்பதற்கு மன தைரியமும், உடல் வலிமையும் கட்டாயம் தேவையாக உள்ளது. அதற்கு இந்த தற்காப்பு கலை பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஆனால், இப்பயிற்சி நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்கள் முழுமையாக கற்றுக்கொள்ள முடிவதில்லை. கூடுதல் நாட்கள் பயிற்சி வழங்குவதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.