UPDATED : நவ 21, 2026 09:57 PM
ADDED : நவ 21, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், தகவல் தொகுப்பு கையேடு வெளியிடப்பட்டது.
திருப்பூர் மங்கை பாரதி தகவல் மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, ‘தகவல் தொகுப்பு நவ. 2026’ வெளியிடப்பட்டது. சங்க வளாகத்தில் நடந்த நிகழ்வில் கந்தன் கார்ட்ஸ் கந்தசாமி இதை வெளியிட, சங்க செயற்குழு உறுப்பினர் தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார். இதில், இந்திய ஜனாதிபதிகள், பிரதமர்கள் பதவிக்காலம் குறித்த விவரங்கள், நெருப்பெரிச்சல் வருவாய் வட்டம் குறித்த அரசாணை விவரங்கள், பிறப்பு இறப்பு பதிவு குறித்த விதிமுறைகள்; திருவாசகப் பாடல் ஆகியன இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் சங்கத்தினர் கலந்து கொண்டனர். சங்கர் நன்றி கூறினார்.
