/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் இடுபொருட்கள்; வேளாண் துறை அழைப்பு
/
மானிய விலையில் இடுபொருட்கள்; வேளாண் துறை அழைப்பு
ADDED : செப் 14, 2025 11:09 PM
உடுமலை; குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கார்த்திகா கூறியதாவது :
குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பெதப்பம்பட்டி மற்றும் குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற மக்காச்சோள சோளம், உளுந்து மற்றும் கொண்டக்கடலை விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், திரவ உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பட்டு காரணிகள் டி.விரிடி மற்றும் சூடோமொனாஸ், சிறுதானியம் மற்றும் பயறு நுண்ணூட்ட உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ராபி பருவம் துவங்க உள்ள நிலையில், பயிர் சாகுபடிக்குத் தேவையான மேற்கண்ட இடுபொருட்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயனடையலாம், என குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) கார்த்திகா தெரிவித்துள்ளார்.