/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'புறா கூண்டு' போல வீடுகள்; ஆய்வு செய்ய வலியுறுத்தல்
/
'புறா கூண்டு' போல வீடுகள்; ஆய்வு செய்ய வலியுறுத்தல்
'புறா கூண்டு' போல வீடுகள்; ஆய்வு செய்ய வலியுறுத்தல்
'புறா கூண்டு' போல வீடுகள்; ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2025 12:45 AM
திருப்பூர் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் வீடுகள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நகர் பகுதிகள் வீடுகள் கிடைத்தாலும் அதிக வாடகை காரணமாக தொழிலாளர்கள் அருகில் உள்ள கிராமப்புறங்களை நோக்கி செல்கின்றனர்.
திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் தனி மின் இணைப்பு, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் இருந்தாலும் கூட தொழிலாளர்கள் அங்கு குடியேறி வருகின்றனர்.
சமீபத்தில் திருப்பூரில் அடிப்படை வசதிகள் இன்றி கட்டப்பட்டிருந்த, 42 வீடுகள் தீப்பிடித்ததில் ஒட்டுமொத்தமாக கருகி சாம்பல் ஆனது. இதனால் தொழிலாளர்கள் சிறுக சிறுக சேமித்த தங்களின் அனைத்து பொருட்களையும் இழந்து மாற்றுத் துணி கூட இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.
இனி வரும் காலத்தில் வேலை தேடி திருப்பூருக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடக்கூடாது. எனவே, அடிப்படை வசதிகள் அற்ற புறா கூண்டு வீடுகளை கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.