/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை கோவிலில் கடைகளில் ஆய்வு
/
சிவன்மலை கோவிலில் கடைகளில் ஆய்வு
ADDED : பிப் 13, 2025 07:16 AM
திருப்பூர்; சிவன்மலையில் தைப்பூசத்தையொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, தற்காலிகமாக உணவு கடைகள், அன்னதானம் வழங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் ஆய்வு செய்தனர். எட்டு அன்னதானம் வழங்கும் இடம், 33 கடைகளில் ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்க பயன்படுத்த கூடிய மூலப்பொருட்கள் தரமானதாக வாங்கி முறையாக சேகரம் செய்து பயன் படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தயாரிக்க பயன்படுத்த கூடிய குடிநீர், பாத்திரம் சுத்தமானதாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி, விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.

