/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊதியூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
/
ஊதியூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ADDED : செப் 12, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; தரம் உயர்த்திய ஊதியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு முதன் முறையாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார்.
காங்கயம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஊதியூரில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இந்த ஸ்டேஷன் துவங்கியது முதல் எஸ்.ஐ., தான் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டார்.
தற்போது இந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டது. இதனால், தற்போது முதன் முதலாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் மது விலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த சரோஜா, ஊதியூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.