/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுச்சான்றிதழ்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
/
மாற்றுச்சான்றிதழ்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
ADDED : மே 09, 2025 06:51 AM
உடுமலை; பள்ளி மாணவர்களுக்கு மாற்றுசான்றிதழ்களை, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் தயார் நிலையில் வைத்திருக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு தற்போது புதிய கல்வியாண்டில் செல்ல உள்ள வகுப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் அடிப்படையில், தற்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இணையதளத்தில் அந்தந்த வகுப்புகளுக்கான பிரிவில், மாற்றுச்சான்றிதழ்களை தயார்நிலையில் வைத்திருக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு வழிமுறைகளை வழங்கியுள்ளனர்.
மேலும், மாற்றுசான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புகை கிடைத்த பின், உடனடியாக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முன்னேற்பாடாக, தற்போது சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.