/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு மையப்பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்
/
சுத்திகரிப்பு மையப்பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்
சுத்திகரிப்பு மையப்பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்
சுத்திகரிப்பு மையப்பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்
ADDED : செப் 26, 2025 06:47 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், நொய்யல் ஆற்றில் வந்து சேரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில் சேனா பள்ளம், சங்கிலி பள்ளம், ஜம்மனை ஓடை, மந்திரி வாய்க்கால் உள்ளிட்ட ஓடைகளும், நொய்யலில் கலக்கும் கழிவு நீர் கால்வாய்களும் பகுதி வாரியாக ஒருங்கிணைத்து சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.
இதற்காக முள்ளுக்காடு, ஆலங்காடு, காசிபாளையம், சின்னான் நகர் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல்வேறு காரணங்களால் இதன் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.
சில இடங்களில் கழிவு நீர் வடிகால்கள் முறையாக சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணிகள் கூட நிறைவடையாமல் உள்ளது. இதனால், இத்திட்டம் முழு அளவில் பயன்பாட்டுக்கு வராமல் இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைந்துள்ள இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினரிடம், தாமதமின்றி பணிகளை விரைந்து மேற்கொண்டு செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.