/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 48 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றதாக தகவல்
/
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 48 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றதாக தகவல்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 48 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றதாக தகவல்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 48 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றதாக தகவல்
ADDED : பிப் 16, 2025 02:30 AM
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ், 46 ஆயிரத்து 270 பேர் பயன் பெற்றுள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2021-21ம் ஆண்டு முதல், வேளாண் வளர்ச்சியை உருவாக்க அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்ப் செட் அமைத்தல், வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், பால் உற்பத்தியை பெருக்குதல், நுண்ணீர் பாசன முறையை ஊக்குவித்தல், வருவாய் துறையினர் வாயிலாக புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அதிகளவு கடன் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2021-22ல், 50 கிராம ஊராட்சிகளில், 12 தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, 11 தரிசு நில தொகுப்புகளில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன; 4,377 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். 2022 - 23ல்,68 கிராம ஊராட்சிகளில், 5 தரிசு நில தொகுப்புகளில், ஆழ்துறை கிணறு அமைக்கப்பட்டு, தோட்டக்கலை பயிர், பயிரிடப்பட்டுள்ளது; இத்திட்டத்தில், 15 ஆயிரத்து 855 பேர் பயனடைந்துள்ளனர்.
2023 -24ல், 52 ஊராட்சிகளில், வரப்பு பயிர்கள் பயிரிடப்பட்டது மற்றும் தெளிப்பான் வழங்கும் திட்டத்தில், 12 ஆயிரத்து 204 பேர் பயன் பெற்றுள்ளனர். 2024-25ல், 51 கிராம ஊராடசிகளில்,13 ஆயிரத்து 804 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

