/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு முகாம் அமைத்து வரி வசூல் உள்ளாட்சிகளில் தீவிரம்
/
சிறப்பு முகாம் அமைத்து வரி வசூல் உள்ளாட்சிகளில் தீவிரம்
சிறப்பு முகாம் அமைத்து வரி வசூல் உள்ளாட்சிகளில் தீவிரம்
சிறப்பு முகாம் அமைத்து வரி வசூல் உள்ளாட்சிகளில் தீவிரம்
ADDED : பிப் 04, 2024 08:35 PM
உடுமலை:உடுமலை தாலுகாவில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வரி வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் அரையாண்டு, முழு ஆண்டு வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன. நிதியாண்டு அடிப்படையில் இந்த வரியினங்கள், ஏப்., 1ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச், 31ம் தேதி என்ற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் வரியினங்கள் வசூல் செய்யப்பட்டாலும், பெரும்பாலானோர் இதை நிதியாண்டு இறுதியில் தான் செலுத்துவர்.
உள்ளாட்சி அமைப்புகளும், இந்த கால கட்டத்தில் தான் மும்முரமாக வரி வசூலை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
வரும் ஏப்., அல்லது மே மாதம் லோக்சபா தேர்தல் நடத்தப்படலாம்; இதற்கான அறிவிப்பு, வரும் பிப்., அல்லது மார்ச் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வரி வசூலில் முழுமையாக ஈடுபடவோ, கடுமை காட்ட முடியாத நிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும்.
மேலும், தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரையில், இரு மாதங்களுக்கு மேல் வரி வசூல் செய்வதும் பெரும் சவாலாகவே இருக்கும்.
இதைக்கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தற்போது, வரி வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
உடுமலை தாலுகாவில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் இதற்கான பணி வேகமெடுத்துள்ளது. ஆங்காங்கே, சனி மற்றும் ஞாயிறு தினங்களில், சிறப்பு முகாம் அமைத்து, வரி வசூல் செய்யப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்பினர் கூறியதாவது:
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, வரி வசூல் இலக்கை எட்டிவிட வேண்டும். அதற்கேற்ப பணிகளை மும்முரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் வருவாய் பிரிவினர் இதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
வருவாய் பிரிவு ஊழியர்கள் வரி நிலுவை குறித்த அறிவிப்புகளை, வீடு வாரியாக வழங்கி வருவதுடன், ஆட்டோக்களின் ஒலிப்பெருக்கி அமைத்து வரியினங்கள் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

