/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் விலை உயர்வால் தென்னை சாகுபடியில் ஆர்வம்
/
தேங்காய் விலை உயர்வால் தென்னை சாகுபடியில் ஆர்வம்
ADDED : ஜூலை 22, 2025 11:18 PM

பொங்கலுார்; காய்கறி, எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஏற்ற இறக்கம் காரணமாகவும், விளைச்சல் சரிவாலும் அடிக்கடி நஷ்டத்தை சந்திக்கின்றனர். கால்நடை வளர்ப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஆனால், மர விவசாயிகள் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் தென்னையை பிரதானமாக பயிரிட்டு வருகின்றனர். பூச்சி தாக்கு தல், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களை சந்தித்தாலும் இந்த ஆண்டு தேங்காய் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளது.
ஒரு காய் அதிகபட்சமாக தோப்புகளிலேயே, 40 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் தொட்டி மூன்று ரூபாய்க்கும், உரிமட்டை இரண்டு ரூபாய், கொப்பரை கிலோ, 240 ரூபாய்க்கும் விலை போகிறது.
இதனால் வியாபாரிகள் தேங்காய்க்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். விவசாயிகள் தற்பொழுது எண்ணெய் வித்து பயிரான தென்னையின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.
எண்ணெய் வகைகள், 60 சதவீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் வருங்காலத்திலும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனால் போதுமான அளவு நீர் வளம் உள்ள விவசாயிகள் தென்னை நடவுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.