/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆய்வுக்கு சென்ற கமிஷனரிடம் முறையிட்ட பொதுமக்கள்
/
ஆய்வுக்கு சென்ற கமிஷனரிடம் முறையிட்ட பொதுமக்கள்
ADDED : ஜூலை 22, 2025 11:18 PM
திருப்பூர்; வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் நேற்று காலை, 3வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரிடம் முறையிட்டனர். பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய குழிகள் முறையாக மூடப்படுவதில்லை; மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடக்கிறது.
இப்பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுவதால் ஏற்படும் அவதி குறித்தும் முறையிட்டனர். பணிகளை விரைந்து செய்து முடிக்கவும், பொதுமக்கள் தெரிவித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் கமிஷனர் உறுதியளித்தார்.
அதன்பின் கூலிபாளையம் பகுதியில் கட்டு மானப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடம்; மண்ணரை குளம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.