ADDED : ஜூலை 22, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சங்கராபுரம் கிழக்கு, பாரதி நகரை சேர்ந்தவர் ஹரி, 29; பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கிரைண்டர் போன் செயலி வாயிலாக, சிலரிடம் பேசி வந்தார்.
அதில், பேசிய நபர், ஹரியிடம் தனிமையில் பேச அழைத்தார். இதனை நம்பிய அவர், பெருந்தொழுவு அருகே காட்டுப்பாளையத்துக்கு சென்றார். அங்கு நின்றிருந்த வாலிபரிடம் ஹரி பேசினார். அப்போது முட்புதருக்குள் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் வெளியே வந்து, ஹரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2.5 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.
புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்து, செரங்காட்டை சேர்ந்த அபிநிவாஸ், 21, மனோஜ்குமார், 21 ஆகியோரை கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.