/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி - 2025 திருப்பூரில் நாளை துவக்கம்
/
சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி - 2025 திருப்பூரில் நாளை துவக்கம்
சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி - 2025 திருப்பூரில் நாளை துவக்கம்
சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி - 2025 திருப்பூரில் நாளை துவக்கம்
ADDED : செப் 15, 2025 11:49 PM
திருப்பூர்; திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், 52வது சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
சர்வதேச நிட்பேர் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், இந்திய'நிட்பேர்' கண்காட்சி, சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இதுவரை, 51 கண்காட்சிகள் நடந்துள்ளன.
அதன்படி, 52வது இந்திய சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, நாளை துவங்கி, 19 ம் தேதி வரை, தினமும், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 வரை நடக்க உள்ளது. 'நீடித்த நிலையான பசுமையான உலகை பின்னலாம்' என, ஐ.கே.எப்., அசோசியேஷன் மற்றும் ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, சேலம், கரூர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலிருந்தும் நிறுவனங்கள், கண்காட்சியில் 'ஸ்டால்' அமைக்கின்றன. உலக அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக முகவர்கள்; தொழில் அமைப்பினர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இலங்கை, நார்வே, கொலம்பியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகளிலிருந்து பையர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சி வாயிலாக, அமெரிக்க சந்தைக்கு மாற்று சந்தைகளை கண்டறிந்து, வர்த்தக தொடர்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டனுடன், வரியில்லா வர்த்தக உடன்படிக்கை, விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் நடக்கும், சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, பிரிட்டன் வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்க, பக்கபலமாக இருக்கும் என்றும், தொழில்துறையினர் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து, நீண்டகால தொழில், வர்த்தக கூட்டமைப்பை உருவாக்க உறுதுணையாகவும் இருக்கும். கண்காட்சியை, ஏ.இ.பி.சி., தலைவர் சுதிர் ேஷக்ரி திறந்து வைக்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தொழில் அமைப்பினரும், தொழில் கூட்டமைப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.