/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் 'வெயிட்டிங்' பட்டியல் வசதி அறிமுகம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் 'வெயிட்டிங்' பட்டியல் வசதி அறிமுகம்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் 'வெயிட்டிங்' பட்டியல் வசதி அறிமுகம்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் 'வெயிட்டிங்' பட்டியல் வசதி அறிமுகம்
ADDED : செப் 18, 2024 09:20 PM
திருப்பூர்,:'மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறும் மனுக்களை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக பெற்று, விரைவாக தீர்வு வழங்க ஏதுவாக, மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பெறப்படும் மனுக்கள், மக்களுடன் முதல்வர் திட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. மனுக்களை பரிசீலித்து, 30 நாட்களுக்குள் தீர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய அரசுத்துறைகள் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இலவச வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி வீடு, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கோரும் மனுக்கள் போன்ற, நீண்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் மனுக்கள், தனியே பிரித்து, பதிவேடு வாயிலாக பராமரிக்கப்படுகிறது.
இணையதளத்தில், குறிப்பிட்ட நல உதவி வழங்குவதற்கான பயனாளிகள் எத்தனை பேர் என்ற விவரத்தை பார்க்க முடியாத நிலை இருந்தது. இதனால், சமூக பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக, மக்களுடன் முதல்வர் திட்ட இணையதளம், புதிய வசதிகளுடன் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்படும். மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில், பயனாளிகள் பட்டியல், அந்தந்த தாலுகாவில் பராமரிக்கப்பட்டது. இனி, அதே இணையதளத்தில், காத்திருக்கும் பயனாளிகள் பட்டியலை பராமரிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகள் விபரம், காத்திருப்போர் பட்டியலில் பராமரிக்கப்படும். இதன்மூலம், தலைமை செயல் அதிகாரிகள், தாலுகா வாரியாக, காத்திருக்கும் பயனாளிகள் பட்டியலை பார்வையிட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.