/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் சம்பள உயர்வு: ஐ.என்.டி.யு.சி. தீர்மானம்
/
தொழிலாளர் சம்பள உயர்வு: ஐ.என்.டி.யு.சி. தீர்மானம்
ADDED : அக் 27, 2025 11:10 PM
திருப்பூர்: ஐ.என்.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், பொருளாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
உடனடியாக, பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். நலவாரியத்தில், தெளிவுரை வேண்டும் என்று கூறி, கேட்பு மனுக்களை திருப்பி அனுப்பும் நிலையை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும்.
பல்வேறு நலவாரியங்கள் இயங்குவதை மாற்றி, மூன்று நலவாரியமாக ஒருங்கிணைக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டிய நேரத்தில், சரியான ஆவணம் இணைக்கவில்லை என்று, வயதான தொழிலாளர்களை அலைக்கழிப்பதை தவிர்த்து, உடனுக்குடன் உதவிகளை வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

