/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலம் மீது மின் கம்பங்கள் மாற்றி அமைக்க ஆய்வு
/
பாலம் மீது மின் கம்பங்கள் மாற்றி அமைக்க ஆய்வு
ADDED : செப் 30, 2025 11:53 PM

திருப்பூர்; நடராஜா தியேட்டர் புதிய பாலம் பகுதியில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்றுவது குறித்து ஆய்வு நடந்தது.
திருப்பூர் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உயர் மட்டப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நடராஜா தியேட்டர் ரோட்டில், நொய்யல் ஆற்றின் குறுக்கில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்துக்கு வசதியாக நடைபெறும்.
பாலம் கட்டுமானப்பணி முடிந்து தற்போது ரோட்டுடன் இணைக்கும் வகையில் அணுகுசாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானம்நிறைவடைந்தும், வாகனங்கள் இதன் மீது சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலம் அணுகு சாலையில் வரிசையாக மின் கம்பங்கள் அமைந்துள்ளன. இந்த கம்பங்கள் இடமாற்றி அமைத்தால் மட்டுமே பாலம் மீது வாகனப் போக்குவரத்துக்கு ஏதுவாக அமையும்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அமித், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, மின் வாரிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
அதில், மின் கம்பங்கள் இடமாற்றம் செய்ய வேண்டியது குறித்து விளக்கப்பட்டது. உரிய துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய முடிவானது. இப்பணி முடிந்தவுடன் பாலம் மீது வாகனப் போக்குவரத்து துவங்கும்.