/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சியில் முறைகேடுகள்? தணிக்கைக்கு வலியுறுத்தல்
/
ஊராட்சியில் முறைகேடுகள்? தணிக்கைக்கு வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 12:43 AM
பல்லடம்: பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரதீப் சக்தி, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
பணிக்கம்பட்டி ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புக்காக, 6 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு குடிநீர் குழாய் இணைப்புக்கு, மாத கட்டணமாக, 100 ரூபாய் மட்டுமே ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆனால், ஊராட்சியில், இதற்கான பிரத்யேக அட்டை போட்டு, வீடு தோறும், மாதம் 120 ரூபாய் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது.
ஏறத்தாழ, 2 ஆயிரம் குடிநீர் இணைப்புக்கு, ஆண்டுக்கு, 26 லட்சம் ரூபாய் தொகை ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் கையில் வைத்துக் கொண்டு, நிதியாண்டின் இறுதியில், வங்கிக் கணக்கில் செலுத்துகின்றனர்.
இந்த முறைகேடுகளுக்குரிய ஆவணங்களை, ஊர் பொதுமக்கள் கையொப்பமிட்டு, ஏற்கனவே புகார் மனுவாக கொடுத்துள்ளனர்.
ஊராட்சியின் பல இடங்களில், கீழ்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதாக கூறி, ஆழமான குழிகளை தோண்டி, அதில் வரும் கிராவல் மண்களை கடத்தியுள்ளனர்.
ஊராட்சி மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், பணிகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால், சிறப்பு தணிக்கை செய்வதுடன், சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி, சிறப்பு தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

