ADDED : அக் 30, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஒவ்வொரு மாவட்டத்திலும், தாய் - சேய் சுகாதார சேவை, தொற்று நோய்களை கட்டுப் படுத்துதல், பல்வேறு நோய்களை தடுத்தல், முன்னெச்சரிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
மாவட்ட அளவில் நோய் கண்காணிப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலை ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வுக்கூட்டம், இதர கள ஆய்வுகளை நாள்தோறும் மேற்கொள்ள வாகனம் இல்லாமல், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் வேறு வாகனங்களில் பயணித்து வந்தனர்.
மாநிலம் முழுதும், மாவட்ட சுகாதாரத்துறைக்கு, 45 வாகனங்கள் வழங்கியதன் வாயிலாக, திருப்பூர் சுகாதார மாவட்டத்துக்கும் ஒரு வாகனம் கிடைக்க பெற்றுள்ளது. புதிய வாகனம் வந்துள்ளதால், இனி கள ஆய்வு பணி வேகமெடுக்கும் என நம்பலாம்.

