/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் சாத்தியமா?
/
கல்லுாரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் சாத்தியமா?
கல்லுாரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் சாத்தியமா?
கல்லுாரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் சாத்தியமா?
ADDED : பிப் 09, 2024 01:44 AM
திருப்பூர்:''லோக்சபா தேர்தலுக்கு முன், கல்லுாரி தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை' என்கின்றனர் கல்லுாரி பேராசிரியர்கள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''லோக்சபா தேர்தலுக்கு முன் கல்லுாரிகளில் பருவத்தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின், இதுகுறித்து முடிவெடுக்கப்படும்,'' என, அறிவித்துள்ளார்.
வழக்கமாக பாரதியார் உட்பட பல்கலை தேர்வுகள் ஏப்ரல், மே மாதம் நடைபெறும். அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'ஒரு செமஸ்டருக்கு, 80 முதல் 90 நாட்கள் கல்லுாரி செயல்பட வேண்டும். தற்போது பாடங்கள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வரும் வாரங்களில் தான் வகுப்பு, அதன் பின் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
'ஒரு மாதம் கழித்து தான் செய்முறை தேர்வுகள், ஏப்., இரண்டாவது வாரத்துக்கு பின் தான், செமஸ்டர் தேர்வு நடத்த முடியும். குறைந்தபட்ச நாட்களே உள்ளதால், தேர்தலுக்கு முன் பல்கலை தேர்வுகளை நடத்தி முடிப்பது சாத்தியமில்லை' என்றனர்.

