/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காமராஜரை இழிவுபடுத்துவதா: த.மா.கா.,வினர் போராட்டம்
/
காமராஜரை இழிவுபடுத்துவதா: த.மா.கா.,வினர் போராட்டம்
காமராஜரை இழிவுபடுத்துவதா: த.மா.கா.,வினர் போராட்டம்
காமராஜரை இழிவுபடுத்துவதா: த.மா.கா.,வினர் போராட்டம்
ADDED : ஜூலை 20, 2025 11:20 PM

திருப்பூர்; தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப் பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், மாநகராட்சி கவுன்சிலர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவாக பேசிய தி.மு.க., - எம்.பி., சிவாவை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, சிவாவின் படத்தை எரித்தனர். போலீசார் விரைந்து, உருவப்படத்தை பறிமுதல் செய்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்து, அனைவரும் கலைந்து சென்ற நிலையில், உருவப்படம் எரித்தவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, உருவப்படம் எரித்தது தொடர்பாக, ஒன்பது பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.