/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டமா?
/
பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டமா?
ADDED : டிச 04, 2025 08:10 AM
பல்லடம்: கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனில், சிறுத்தை நடமாடிய காட்சி அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. நேற்று மாலை, பல்லடம் அடுத்த, கரடிவாவி பகுதியில், சிறுத்தை நடமாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கம்மாளபட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், கரடிவாவி -- காமநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில், குடும்பத்துடன் காரில் சென்றபோது, மாலை, 6.15 மணியளவில், கரடிவாவி அரசு மருத்துவமனை அருகே, சிறுத்தை ஒன்று ரோட்டை கடந்து சென்றதாகவும், அதன் காலில் அடிபட்டு உள்ளதாகவும், ஆடியோ பதிவு ஒன்றை வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் கேட்டதற்கு, 'இது தொடர்பாக வனத்துறைக்கும்தகவல் தெரிவித்துள்ளோம்' என்றனர்.

