/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மன் கோவில் சுற்றுலா திருப்பூருக்கும் உண்டா?
/
அம்மன் கோவில் சுற்றுலா திருப்பூருக்கும் உண்டா?
ADDED : ஜூலை 13, 2025 12:39 AM
திருப்பூர் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆடி மாத அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் பயணமாக பட்டியல், பேக்கேஜ் தயாரித்து, 10 கோவில்களுக்கு ஒரு நாள் பயணத்துக்கு, ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் பல உள்ளன. பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன், கோவை கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன், திருப்பூரில் பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோட்டில் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளது.
சென்னை, மதுரைக்கு அறிவிப்பு வெளியிட்டது போல், மேற்கு மண்டல மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா சிறப்பு பஸ் இயக்கம், கோவில்கள் பட்டியல், பேக்கேஜ் குறித்த அறிவிப்பை போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.