/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒரு மாதமாச்சு! மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒரு மாதமாச்சு! மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒரு மாதமாச்சு! மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒரு மாதமாச்சு! மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : ஜூன் 30, 2025 10:23 PM

உடுமலை; உடுமலையில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒரு மாதமாகியும், பயன்பாட்டிற்கு வராததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மப்சல் பஸ்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், 15 ஆண்டுக்கு முன், வி.பி., புரம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப் பின், கடந்த, 2018 ல் நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய, 3.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
திட்ட காலம் முடிந்தும், 5 ஆண்டுகளாக 'ஆமை' வேகத்தில் பணி நடந்து, ஆறு மாதத்திற்கு முன் முடிந்தது. இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது.
கடந்த மாதம், 29ம் தேதி, கூடுதல் பஸ் ஸ்டாண்ட், தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. ஆனால், நகராட்சி, போக்குவரத்துறை, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், திறந்து ஒரு மாதமாகியும், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், பொக்லைன் உள்ளிட்ட கன ரக வாகனங்களும், ரவுண்டானா பகுதியில் கார், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும், பழநி ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் என ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.