/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி டென்னிகாய்ட்டில் வெற்றி
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி டென்னிகாய்ட்டில் வெற்றி
ADDED : நவ 08, 2025 12:59 AM

திருப்பூர்: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே டென்னிகாய்ட் போட்டி, கடந்த 6ம் தேதி நடந்தது.
இதில் திருப்பூர் அருகிலுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 வயது இரட்டையர் பிரிவில், சஷாங்ரெட்டி, சம்ரிஷ் இரண்டாம் இடமும், 14 வயது ஒற்றையர் பிரிவில் சஞ்சய் மூன்றாம் இடமும், 14 வயது இரட்டையர் பிரிவில் ஸ்ரீமன்தேசித் மற்றும் சஞ்சய் இரண்டாம் இடமும், 16 வயது ஒற்றையர் பிரிவில் தனுவந்த் முதல் இடமும், 16 வயது இரட்டையர் பிரிவில் சந்தோஷ் மற்றும் தனுவந்த் மூன்றாம் இடமும், 19 வயது ஒற்றையர் பிரிவில் மிதுன் கார்த்தி மூன்றாம் இடமும், 19 வயது இரட்டையர் பிரிவில் நேஹன் மற்றும் மிதுன் கார்த்தி மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் கிருஷ்ணன், சைனிக் பள்ளியின் கமாண்டண்ட் குரூப் கேப்டன் நடராஜ், பள்ளி முதல்வர் மலர்விழி, உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கோமதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

