ADDED : டிச 12, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் ஒன்றியம், மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 65. மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசிக்கிறார். மகன் முத்துக்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், அனைவரும் குடும்பத்துடன் திட்டக்குடி சென்றனர். முத்துக்குமாரின் நண்பர் காளிமுத்து, 36 என்பவர், முத்துக்குமாரை பார்க்க வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரண்டு சவரன் நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது.