/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இணைவோம் மகிழ்வோம்' மாணவர் - பெற்றோர் உற்சாகம்
/
'இணைவோம் மகிழ்வோம்' மாணவர் - பெற்றோர் உற்சாகம்
ADDED : மார் 07, 2024 04:27 AM
பல்லடம் : பல்லடத்தில் நடந்த, 'இணைவோம் மகிழ்வோம்' விளையாட்டு விழாவில், மாற்றுத்திறன் மாணவர்களுடன் பெற்றோரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பல்லடம் வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 'இணைவோம் மகிழ்வோம்' விளையாட்டு விழா நடந்தது. பல்லடம் வட்டம் மைய மேற்பார்வையாளர் அங்கையற்கண்ணி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மபிரபு, பி.டி.ஓ., காலனி தலைமை ஆசிரியை ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பலூன் விளையாட்டு, புதிர் விளையாட்டு, நடிப்பு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்களுடன் பெற்றோரும் பங்கேற்று உற்சாகமடைந்தனர். ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்லடம் வட்டார வள மைய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

