/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலைமகள் மடியில் கலைமகள் கோவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி
/
மலைமகள் மடியில் கலைமகள் கோவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி
மலைமகள் மடியில் கலைமகள் கோவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி
மலைமகள் மடியில் கலைமகள் கோவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி
ADDED : நவ 14, 2024 04:42 AM
திருப்பூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருபாலரும் பயிலும் சச்சி தானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளி அமைந்துள்ளது.
நீலகிரி மலைமகளின் பாதங்களில் பசுமையான 50 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள இப்பள்ளி, 4 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கற்றல் செயல்பாடுகள், விளையாட்டு, ஆன்மிக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வதற்கான சூழலை உருவாக்குகிறது.
கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ராமசாமி இப்பள்ளியின் நிர்வாக அறங்காவலர்; ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவளத்துறை இயக்குனர் முனைவர் கவிதாசன், பள்ளியின் செயலராவார்.
முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன், தொழிலதிபர் ஈரோடு மயிலானந்தன், முன்னாள் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், முன்னாள் தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
பள்ளி கல்வி ஆலோசகராக 'நல்லாசிரியர்' டாக்டர் கணேசன், பள்ளி முதல்வராக டாக்டர் உமாமகேஸ்வரி, துணை முதல்வராக முனைவர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.

