/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் காளை சிலை பணி: விரைவுபடுத்த கோரிக்கை
/
காங்கயம் காளை சிலை பணி: விரைவுபடுத்த கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 02:11 AM
திருப்பூர்: காங்கயம் காளை சிலை அமைப்பு சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சண்முகசுந்தரம், ரவி, சிவராஜா, சக்திகுமார் உள்ளிட்டோர் நேற்று திருப்பூரில், அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த மனு விவரம்:
காங்கயம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற காங்கயம் காளைக்கு சிலை அமைக்க பல தரப்பிலும் எழுந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இது குறித்து அமைச்சர் சாமிநாதன் கடந்த 2021ல், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.
பொது இடத்தில் சிலை அமைப்பதில் கோர்ட் வழிகாட்டுதல் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணி காரணமாகவும் இதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2023 ல், அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் இதற்கான இடத்தை கள ஆய்வு செய்தனர்.
அதன் பின் தற்போது இதற்கான நிபுணர் குழு சென்னையிலிருந்து வந்து காங்கயம் காளையின் உருவ அளவுகளை எடுத்தும், சிலை அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தனர். சிலை மாதிரி தயாரிப்புக்கான ஆயத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காளை சிலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.