/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் 4 ஆண்டு சொத்து வரி பாக்கி
/
காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் 4 ஆண்டு சொத்து வரி பாக்கி
ADDED : செப் 27, 2025 01:29 AM
திருப்பூர்; காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் மீது, 4 ஆண்டு நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துமாறு, நகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து, காங்கயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்பிய கடித விவரம்:காங்கயம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள காங்கயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொத்துவரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 பிப்.,13 முதல் இக்கட்டடம் பயன்பாட்டில் உள்ளது.
புதிதாக சொத்துவரி வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடத்திற்கு 2022 - 23 முதல் அரையாண்டு முதல் 2025 -26ம் நிதியாண்டுக்கு இரண்டு அரையாண்டு சொத்துவரி செலுத்த வேண்டும்.அவ்வகையில், 2022 -23 ஆண்டில், 57,922 ரூபாய், 2023-24 ஆண்டு 57,922 ரூபாய், 2024-25 ஆண்டுக்கு 59,641 ரூபாய்.
இதுதவிர, 2025-26 ஆண்டுக்கு 61,360 ரூபாய் என சொத்து வரி மொத்தம், 2,36,845 ரூபாய் செலுத்த வேண்டும்.நிதியாண்டு துவங்கிய, 30 நாட்களுக்குள் இந்த வரி செலுத்தி, நகரின் வளர்ச்சிக்கு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.