/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று பிறக்கிறது கார்த்திகை மாதம்; சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
இன்று பிறக்கிறது கார்த்திகை மாதம்; சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
இன்று பிறக்கிறது கார்த்திகை மாதம்; சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
இன்று பிறக்கிறது கார்த்திகை மாதம்; சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : நவ 15, 2024 11:11 PM

திருப்பூர் ; சபரிமலை செல்லும் பக்தர் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே இரு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06111) வரும், 19 முதல், 2025 ம் ஆண்டு ஜன., 14 வரை செவ்வாய் தோறும் இயக்கப்பட உள்ளது. இரவு, 11:20 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில் மறுநாள் மதியம்,12:30க்கு கொல்லம் சென்று சேரும்.
காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும் சிறப்பு ரயில், கோவை செல்லாது; போத்தனுார் வழியாக பயணிக்கும். திருப்பூரை புதன் காலை, 6:45 மணிக்கு இந்த ரயில் கடக்கும்.
மறுமார்க்கமாக, கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06112) வரும், 20 ம் தேதி முதல் புதன்தோறும் இயங்கும். இந்த ரயில் திருப்பூருக்கு அதிகாலை, 1:18 மணிக்கு வரும். வரும், 2025, ஜன., 15ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும்.
மற்றொரு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06113) வரும், 23 முதல், ஜன., 18ம் தேதிவரையும், கொல்லம் - சென்னை சென்டரல் சிறப்பு ரயில் (எண்:06114) நவ., 24 முதல், ஜன., 19ம் தேதி வரையும் இயங்கும்.
மேற்கண்ட நான்கு சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.