ADDED : அக் 16, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம், மண்ணரை பாரப்பாளையத்தில் அனுசரிக்கப்பட்டது.அங்குள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வீரபாண்டிய பண்பாட்டு கழக மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பொது செயலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தொட்டராஜ், பேச்சிமுத்து, ரத்தினசாமி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.