ADDED : ஆக 23, 2024 10:13 PM

திருப்பூர்:திருப்பூர், பூலுவப்பட்டி, ஏ.பி.எஸ்., பள்ளியில், வடக்கு குறுமைய மாணவர், ேஹண்ட்பால் போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி, 9 - 3 என்ற புள்ளிக்கணக்கில், ஏ.பி.எஸ்., அகாடமி அணியை வென்றது. 17 வயது பிரிவில், ஏ.பி.எஸ்., அகாடமி அணி, வித்யாமந்திர் பள்ளி அணியை, 11 - 5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 19 வயது பிரிவில், வித்யா மந்திர் பள்ளி அணி, 9 - 6 என்ற புள்ளிக்கணக்கில், ஏ.பி.எஸ்., அகாடமி அணியை வென்றது.
மாணவர் கோகோ
நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வடக்கு குறுமைய மாணவர் கோ கோ போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில் திருமுருகன் மெட்ரிக் முதலிடம், ஈடன்கார்டன் பள்ளி, 2வது இடம்; 17 வயது பிரிவில், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்,
சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி 2வது இடம்; 19 வயது பிரிவில், சின்னச்சாமி அம்மாள் பள்ளி முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 2 வது இடம்.
மாணவியர் கோகோ
14, 17 மற்றும் 19 வயது பிரிவில் முறையே, திருமுருகன் மெட்ரிக், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம். 14, 17, 19 வயது பிரிவில், முறையே, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரசிவாஜி மெட்ரிக் பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் இரண்டாமிடம்.
---
வடக்கு குறுமைய போட்டி 14 வயதினர் பிரிவு ேஹண்ட்பால் போட்டியில், ஏ.பி.எஸ்., பள்ளி அணியுடனான ஆட்டத்தில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி வென்றது.