ADDED : அக் 11, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பள்ளி கல்வித்துறை சார்பில், சேலத்தில் எஸ்.ஜி.எப்.ஐ., மாநில வீரர் தேர்வு மல்யுத்த போட்டி நடந்தது. திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பிளஸ் 2 மாணவர் சித்தார்த், தினேஷ் இருவரும் தங்கம் வென்றனர்.
மாணவர் விஷ்வா வெள்ளி வென்றார். மாநில போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் சித்தார்த், தினேஷ் இருவரும், டிச., மாதம் உ.பி., மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய போட்டிக்கு தேர்வாகிய அரசு பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உதவி தலைமை ஆசிரியர் வசந்தாமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பவதி, ஆனந்தன், சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.