/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
/
ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
ADDED : மே 17, 2025 02:36 AM

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் கிராமத்தில், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா நடந்தது.
வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலின், 11வது ஆண்டு விழா, 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சக்தி விநாயகருக்கு தீர்த்தம் விடுதல் மற்றும் மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மறுநாள், திருமூர்த்தி மலை மற்றும் பிள்ளையார்பட்டியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, 5.00 மணிக்கு, ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி வேள்வி மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.