/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பு தன்னிறைவு
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பு தன்னிறைவு
பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பு தன்னிறைவு
பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பு தன்னிறைவு
UPDATED : டிச 08, 2025 05:56 AM
ADDED : டிச 08, 2025 05:29 AM

திருப்பூர்: பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பாலிபேக் தயாரிப்பில், திருப்பூர் தன்னிறைவு பெற்றுள்ளது .
திருப்பூரில், 100க்கும் அதிகமான 'பாலிபேக்' உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்கள், குறு, சிறு பனியன் உற்பத்தியாளர், உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தியாளர், ஆடை உற் பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என, அனைவருக்கும் தேவையான, 'பாலிபேக்' தயாரித்து கொடுக்கின்றனர். தற்போது, தினமும் ஒரு கோடி 'பாலிபேக்' தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி திறன் மேம்பட்டுள்ளதால், திருப்பூரின் 'பாலிபேக்' தேவைகள் தன்னிறைவு பெற்றுள்ளது.
திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சண்முகம் கூறியதாவது:
திருப்பூரில் இயங்கும் 'பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பின்னலாடை தொழிலுக்கு தேவையான 'பாலிபேக்' தயாரிக்கின்றனர். தற்போதைய சூழலில், தினமும் ஒரு கோடி 'பாலிபேக்' வரை தயாரிக்கப்படுகிறது. முன்பு, 'டிஜிட்டல்' படம் பிரின்ட் செய்யப்பட்ட பாலிபேக், ஏற்றுமதி ஆடைகளுக்கான 'பாலிபேக்'குகள், மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது, திருப்பூர்பின்னலாடை தொழிலுக்கு தேவையான அனைத்து 'பாலிபேக்'குகளும் உள்ளூரிலேயே தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 90 சதவீதம் மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் தயாரிப்பதால், பிளாஸ்டிக் கழிவு உருவாவது குறைக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான 'பாலிபேக்'குகளை நாங்கள் உற்பத்தி செய்து வருகிறோம்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு, தினமும் 1 கோடி எண்ணிக்கை அளவில், 'பாலிபேக்' தயாரிக்கப்படுகிறது; மதிப்பு கூட்டப்பட்ட 'பாலிபேக்' தயாரிப்பும் திருப்பூரிலேயே வெற்றியடைந்துள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது குறைந்துவிட்டது. மறுசுழற்சி முறையில், பிளாஸ்டிக் கழிவு, 90 வகை பொருட்களாக உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு: பிளாஸ்டிக் உற்பத்தியாளர் முனைப்பு: திருப்பூரில் மட்டும், பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான, ஆடை மற்றும் உள்ளாடைகளை பேக்கிங் செய்யும் 'பாலிபேக்' தயாரிப்பில், 100க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன், பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட சங்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
- சண்முகம்: கவுரவ தலைவர்:

