/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை; பெற்றோர் அதிருப்தி
/
பள்ளி மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை; பெற்றோர் அதிருப்தி
பள்ளி மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை; பெற்றோர் அதிருப்தி
பள்ளி மைதானங்களில் அடிப்படை வசதி இல்லை; பெற்றோர் அதிருப்தி
ADDED : செப் 15, 2025 09:35 PM
உடுமலை; அரசுப்பள்ளி விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த, விளையாட்டு மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் மாணவர்கள் விளையாடுவதற்கு பயிற்சி பெறுவதற்கு, போதுமான அடிப்படை வசதிகள் பள்ளிகளில் இருப்பதில்லை. மாணவர்கள் விளையாட வேண்டிய மைதானங்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதியில் மட்டுமே, 32 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து, கைப்பந்து, வாலிபால், ஹாக்கி என பல்வேறு போட்டிகளில், ஆண்டுதோறும் பத்திற்கும் மேற்பட்ட சதவீதத்தினர், மாநில மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டுத்துறையில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
ஆனால் அவ்வாறு வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே தொடர்ந்து உள்ளது. அரசுப்பள்ளிகளில் விளையாட்டு மைதானத்திற்கான இடவசதியிருந்தும் ஆடுகளங்கள் அமைக்கப்படாமலும், அடிப்படை வசதியில்லாத ஆடுகளமாக காணப்படுகின்றன.
பள்ளிகளில், சிறு தளவாடங்கள் வாங்குவதற்கும் நிதி பற்றாக்குறையாகதான் உள்ளது.
விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கு, ஸ்பான்சர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக அவ்வப்போது, துாய்மைபடுத்துவது, ஆடுகளத்திற்கான அடிப்படை வசதிகளை செய்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்துறையில், அதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, விளையாட்டு மேம்பாட்டு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மைதானங்களை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்துவதற்கு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.