/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரி விதைப்புக்கு நிலங்கள் தயார்; மழைக்கு காத்திருப்பு
/
மானாவாரி விதைப்புக்கு நிலங்கள் தயார்; மழைக்கு காத்திருப்பு
மானாவாரி விதைப்புக்கு நிலங்கள் தயார்; மழைக்கு காத்திருப்பு
மானாவாரி விதைப்புக்கு நிலங்கள் தயார்; மழைக்கு காத்திருப்பு
ADDED : செப் 17, 2025 08:49 PM
உடுமலை; வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள கணபதிபாளையம், வெனசப்பட்டி, ராகல்பாவி, கொங்கல்நகரம், பொட்டையம்பாளையம், விருகல்பட்டி சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, பரவலாக கொண்டைக்கடலை இப்பகுதிகளில் சாகுபடியாகிறது.
பருவமழை, பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலை சீராக அமைந்தால், ஏக்கருக்கு, நுாறு கிலோ கொண்ட 8 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய விளைச்சல் கிடைக்காமல் மானாவாரியில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: களிமண் விளைநிலங்களில் பிரத்யேகமாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட இடைவெளியில், மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.
பருவமழை போதியளவு பெய்யாதது, செடியின் வளர்ச்சி தருணத்தில் பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் குறைந்து விடுகிறது. தமிழக அரசு, கொண்டைக்கடலையை நேரடியாக கொள்முதல் செய்தால், நல்ல விலை கிடைக்கும்.
இல்லாவிட்டால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருபவர்கள் இச்சாகுபடியை கைவிடும் சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இந்தாண்டு கொண்டைக்கடலை மட்டுமல்லாது, கொத்தமல்லி மற்றும் மக்காச்சோளமும் மானாவாரியாக சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பருவமழை துவங்கியதும், விதைப்பு செய்யப்படும் என தெரிவித்தனர்.