/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மார்க்கெட் கடைகள் பொது ஏலம் விடாவிட்டால் சட்ட நடவடிக்கை'
/
'மார்க்கெட் கடைகள் பொது ஏலம் விடாவிட்டால் சட்ட நடவடிக்கை'
'மார்க்கெட் கடைகள் பொது ஏலம் விடாவிட்டால் சட்ட நடவடிக்கை'
'மார்க்கெட் கடைகள் பொது ஏலம் விடாவிட்டால் சட்ட நடவடிக்கை'
ADDED : ஜன 01, 2025 05:39 AM
திருப்பூர்: எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் பாபு, துணை தலைவர் அப்துல் சத்தார் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள், முன்னர் அங்கு கடை நடத்திய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், குறைந்த வாடகையில் வழங்கப்படுவதாக ெதரிய வருகிறது. இதனால், நிர்வாகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இதற்கு பகிரங்க பொது ஏலம் நடத்த வேண்டும்.
குறிப்பிட்ட நபர்கள், சங்கங்கள் என எந்த சலுகையும் வழங்க கூடாது. அதுபோல் ஏதேனும் நிகழ்ந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் இம்ராகிம் பாதுஷா அளித்த மனு:
தினசரி மார்க்கெட் கடைகள் முறையாக பொது ஏலம் விட்டு உரிய வகையில் வழங்க வேண்டும். முன்னர் கடை நடத்தியோர், குறைந்த வாடகை நிர்ணயம் போன்ற எந்த சலுகையும் வழங்க கூடாது.இங்கு கடை நடத்துவோர் விவசாயிகள் இல்லை.
லாபம் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள். அவர்களுக்கு சலுகை அவசியமில்லை.பஸ் ஸ்டாண்ட் வளாகம் போல் இங்குள்ள கடைகளுக்கும் பொது ஏலம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

