/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்
/
சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்
சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்
சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்
ADDED : ஜன 24, 2025 11:18 PM

திருப்பூர்; தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில், 'சட்ட எழுத்தறிவு கழகம்' மற்றும் 'சட்ட உதவி மையம்' திறப்பு விழா நடந்தது.
தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட எழுத்தறிவு குழு துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், ஐ.எம்.ஏ., டெக்ஸிட்டி மற்றும் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி அமைப்பினர் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் உதவி எண், 1500ஐ, மாஜிஸ்திரேட் ஷபீனா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகிகள் டாக்டர்கள் பிரகாஷ், சதீஷ்குமார் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.