/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவை 'வெல்லலாம்'! அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மலரும்; பின்னலாடை துறையினரின் திறமைகள் உயரும்
/
அமெரிக்காவை 'வெல்லலாம்'! அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மலரும்; பின்னலாடை துறையினரின் திறமைகள் உயரும்
அமெரிக்காவை 'வெல்லலாம்'! அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மலரும்; பின்னலாடை துறையினரின் திறமைகள் உயரும்
அமெரிக்காவை 'வெல்லலாம்'! அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மலரும்; பின்னலாடை துறையினரின் திறமைகள் உயரும்
ADDED : ஆக 04, 2025 10:55 PM

திருப்பூர்; ''இந்திய ஆடைகளுக்கான வரியை 42 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியிருக்கிறது. வரி உயர்வைக் கண்டு திருப்பூர் பின்னலாடைத்துறையினர் அஞ்சத் தேவையில்லை. தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பாதையை தொழில்துறையினர் சரியாக தேர்வு செய்வதற்கு இதுதான் சரியான தருணம்'' என்று வர்த்தக ஆலோசகர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.
கடந்த, 2020-21ம் ஆண்டு வரை, நம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளே, முதலிடத்தில் இருந்தன; அமெரிக்கா 2வது இடத்தில் இருந்தது.
கடந்த, நான்கு ஆண்டுகளாகத்தான், அமெரிக்காவின் ஏற்றுமதி வர்த்தகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் வரி உயர்வால், ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளதால், மாற்றுப்பாதையை தேர்வு செய்ய திருப்பூர் தொழில்துறையினர் தயாராகிவிட்டனர்.
குறுகிய காலத்தில், வரி உயர்வு விவகாரத்தில் தெளிவான தீர்வு கிடைக்கும்; அதுவரை, சமாளித்தால் போதும். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், 8 சதவீதமாக உள்ள பிரிட்டன் ஏற்றுமதி, ஒரே ஆண்டில் கணிசமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது; இதன்மூலம் அமெரிக்காவில் ஏற்படும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் மூலம் ஈடுகட்ட முடியும் என்று பின்னலாடைத்துறையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
போட்டி நாடுகள் வரி வித்தியாசம்மத்திய அரசு மானியமாக வழங்கலாம் புதிய வரி உயர்வால், அமெரிக்காவில் இந்திய ஆடைகளுக்கான வரி, 42 சதவீதமாக உயரும். இந்தியாவுக்கு பாதிப்பு வரும் போது, திருப்பூருக்கும் பாதிப்பு இருக்கும். நம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும், நம் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
நம் போட்டி நாடுகளுக்கும், கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது; ஆனால், சற்று குறைவாக இருக்கிறது. மத்திய அரசு, துரித நடவடிக்கை எடுத்து, போட்டி நாடுகளுக்கும், நமக்கும் உள்ள 5 முதல் 7 சதவீத வித்தியாசத்தை, அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்வோருக்கு மானியமாக வழங்கினால், எவ்வித பாதிப்பும் இல்லாமல் வர்த்தகத்தை தொடர முடியும். நிரந்தர தீர்வாக, வரி மறுசீர்திருத்தம் செய்து கொள்ளலாம்.
- ராஜா சண்முகம், உறுப்பினர், மத்திய வர்த்தக வளர்ச்சி வாரியம்.

